திங்கள், 8 டிசம்பர், 2008

மாலத்தீவு - பாகம் 3


எப்படி வருவது: தற்பொழுது விமானம் மூலமாகவே இங்கு வர இயலும். பெங்களூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவற்றுக்கு நேரடியாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மாலத்தீவுக்கு இயக்கப்படுகின்றன. பயண நேரம் சுமார் ஒரு மணி நேரம் தான். சென்னையில் இருந்து கொழும்பு மார்க்கமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை இயங்கி வருகின்றது. கடல் மார்க்கமாக சரக்கு கப்பல்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றது. விமான நிலையம் அமைந்திருப்பதுவும் ஒரு தீவு தான், பெயர் ஹுலுஹுலெ, இது ஒரு சர்வதேச விமான நிலையமாகும். இங்கிருந்து தேவையான ரிசார்ட்டுக்கு சிறிய விமானம் அல்லது அதி வேக படகுகள் மூலம் செல்லலாம். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இந்நாட்டின் தலை நகரம் மாலே அமைத்துள்ளது.தொடரும்...

3 கருத்துகள்:

கருத்துரையிடுக