செவ்வாய், 27 ஜனவரி, 2009

மாலத்தீவு - பாகம் 18

அஸ்து தீவு:



திங்கள், 26 ஜனவரி, 2009

மாலத்தீவு - பாகம் 17

அனந்தரா தீவு :




ஞாயிறு, 25 ஜனவரி, 2009

மாலத்தீவு - பாகம் 16

அங்காசனா தீவு







தொடரும்..

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

சென்ற வார சமையல் - 2


இந்த வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து நடைப்பயிற்சி முடித்தபின் அப்படியே மார்க்கெட் சென்றோம். முன்னர் நாங்கள் சமைத்த மீன் வகையை தேடினோம் தேடினோம், கடைசியில் சற்றே பெரிதாக இருந்ததை வாங்கி வந்தோம். யார் அதை வெட்டுவது?. என்று சற்று குழப்பம் மற்றும் பயமாகவும் இருந்தது, பிறகு டாஸ் போட்டுப்பார்த்ததில் நான் தேர்வடைந்தேன். மிகவும் ஜாக்கிரதையாக நன்கு கூர்மையான கத்தியை எடுத்துக்கொண்டு மெதுவாக வாலை வெட்டினேன், பின் தைரியம் வந்து வஞ்சிரம் மீனை வெட்டுவதுபோல் துண்டு துண்டாக வெட்டி நன்கு நீரில் கழுவிய பிறகு மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மீன் மசாலா தூளை கலந்து வைத்துவிட்டோம். ஒரு மணி நேரம் கழித்து தோசைகல்லில் சற்று என்னை விட்டு மீனை அதில் இட்டு வருத்து விட்டோம். ஆஹா என்ன சுவை. வஞ்சிரம் மீன் தோற்றது போங்கள், அப்படி ஒரு சுவை. பருப்பு கடையல் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு முடித்தோம்.

திங்கள், 5 ஜனவரி, 2009

மாலத்தீவு - பாகம் 15

வேலை வாய்ப்பு:

இங்கு கட்டிடம், ஹோட்டல், பள்ளி வாத்தியார் மற்றும் கணக்கர் வேலைகளுக்கு வெளி நாடுகளில் இருந்து ஆட்கள் எடுக்கப்படுகின்றனர். கட்டிடம் சம்பத்தப்பட்ட வேலைகளில் கட்டிட வல்லுநர் மற்றும் உதவியாளர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. உதவியாளர்களுக்கு சம்பளம் குறைவு தான். பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர் மற்றும் ஆசிரியை வேலைக்கு சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ் நாடு அரசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் போதுமானது.

அனைவருக்கும் சம்பளம் தவிர, சாப்பாடு மற்றும் தங்கும் செலவுகள் தனியாக தரப்படுகின்றது.

தொடரும்...