புதன், 31 டிசம்பர், 2008

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புதன், 24 டிசம்பர், 2008

மாலத்தீவு - பாகம் 14

திரு யோகன் பாரிஸ் அவர்கள் பின்னூட்டத்தில் நிறைய செய்திகள் கொண்டிருந்ததால் அதனை இங்கு வெளியிடுகிறேன்.

" தங்கள்,இதுவரை எழுதிய "மாலத்தீவு தொடர் பூராகவும் படித்து விட்டு இதை எழுதுகிறேன்.
இத் தீவுக் கூட்டத்தை மாலத்தீவு- மாலதீவு- மாலைதீவு...எனக் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் "மாலைதீவு" என்பதே சரியானது என அறிந்தேன்.மாலை போல் அமைந்திருப்பதால் இக் காரணப்பெயர் வந்ததென கூறினார்கள்.
இணையத்தில் எப்படிப் போட்டாலும் கிடைக்கிறது.
நான் பலதடவை தொலைக்காட்சி விபரணச் சித்திரம் பார்த்துள்ளேன். இயற்கையின் கொடை ஐயமில்லை.
2004 ல் இதன் விமான நிலையத்தில் இலங்கை விமானம் தரித்துப் புறப்பட்டபோது வானிலிருந்து அழகைப் பார்த்தேன். படமாகினேன்.
2025 மட்டில் இத்தீவுக் கூட்டம் கடலுள் மூழ்கிவிடுமென அஞ்சப்படுகிறது.
இந்நாட்டவரை உள்வாங்க ஏனைய நாட்டவர்கள் அனுமதிக்க வேண்டுமென ஐநா அழைப்பும் விட்டுவிட்டதாக அறிந்தேன்.
7ம் பாகத்தில் குறிப்பிட்ட "ருணா" மீனை ; தமிழில் சூரை என்பார்கள். http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=௫௮௪௪இந்தத் தொடரில் பார்க்கவும்.
இத் தீவில் இம் மீனை அவித்துப் பிளிந்து காயவைத்து "மாசி" எனும் கருவாடு உற்பத்தியாகிறது.இதற்கு இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு அரசாங்கத்தை மாற்றும் அளவுக்குச் செல்வாக்கு உண்டு.
ஜெயவர்த்தனா ;தான் ஆட்சிக்கு வந்தால் மாசிக்கருவாடும்; மைசூர் பருப்பும் உடன் இறக்குமதி செய்து
தாராள விநியோகத்துக்கு அனுமதிப்பேன். என தேர்தல் பரப்புரையில் கூறி ஆட்சியைப் பிடித்தவர்.அந்த
அளவுக்கு செல்வாக்கு மிக்கது. "கட்ட சம்பல்" என இதில் சிங்களமக்கள் செய்வார்கள். அருமையாக இருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி மொமுன் அப்துல் கயூம் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவரென்பது
குறிப்பிடத் தக்கது.
இப்போதும் மேற்படிப்புக்காக குறிப்பிட்ட மாணவர்களுக்கு இலங்கை அரசு இடம் கொடுக்கிறது.
உலகிலே இந்த தீவுக்கூட்டம் தான் தொட்டிவளர்ப்புக்கான வண்ண மீன்களை விநியோகிப்பதில் முன்னணி
வகுக்கிறது.
இத்தீவுக்கூட்டத்தைச் சுற்றியுள்ள பவளப்பாறைகளும்; அதன் நீரோட்டத்தின் வெப்பநிலையும்; பல்லின மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்ததாகவும்; பாதுகாப்பானதாக இருப்பதாகவும் உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த வண்ண மீன் விற்பனை கணிசமான அன்நியச் செலவாணியுடன்; தொழிலையும் கொடுப்பதென்பது உண்மையோ அதே அளவு உண்மை சில மீன் இனம் தொடர்ந்து பிடிப்பதால் அற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் மழைநீரைச் சேமித்தே பாவிக்கிறார்கள்.
வீடுகள் அழிந்த பவளப் பாறைகளால் கட்டுகிறார்கள்.
சில தீவுகளுக்கு வேற்றுநாட்டவர் அனுமதியில்லை.
தாங்கள் இட்ட படங்கள் அதிகம் செயற்கை அழகு...இனிமேல் இயற்கை அழகையும் காட்டுங்கள்.
சில காலங்களில் இலங்கை விமானசேவை..அவர்கள் வாடிக்கையாளர்கள் ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்ரேலியா கண்டத்தில் இருந்து இந்தியா;இலங்கை; மாலைதீவு என பயண ஒழுங்கு செய்தால்
3 நாள் மாலைதீவில் தங்க இலவச விடுதி ஒழுங்கு செய்து தருவதாக; விமானத்தில் பணியாளர் கூறினார்.ஆனால் நான் முயலவில்லை.
கட்டணங்கள் மிக அதிகம் என்பது உண்மையே....

தங்கள் பதிவை விட என் பின்னூட்டம் நீண்டு விட்டது..மன்னிக்கவும்." நன்றி திரு யோகன் பாரிஸ்.

மாலத்தீவு - பாகம் 13







வாடகை: இங்கு ரூம் வாடகை இரண்டு நபருக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது நூறு டாலர் முதல் இரண்டாயிரத்து ஐநூறு டாலர் வரை உள்ளது, இதில் உணவுக்கான தொகையும் உள்ளடங்கியுள்ளது. சில ரிசார்ட்டுகளில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து நாட்கள் தங்குவதற்கு தான் ரிசர்வ் செய்யப்படுகின்றது. இரண்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டில் வரியாக எட்டு டாலர் வசூலிக்க படுகின்றது. இரண்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூம் வாடகையில் பாதி மட்டும் கட்ட வேண்டும். இது தவிர போக்குவரத்து செலவுகளுக்கு அதிக பட்சம் ஒருவருக்கு முன்னூறு டாலர் ஆகும். மசாஜ், பார் போன்ற அதிக செலவுகளுக்கு தனியாக தர வேண்டும்.


தொடரும்..

திங்கள், 22 டிசம்பர், 2008

மாலத்தீவு - பாகம் 12





ரிசார்ட்: இங்கு நூறு ரிசார்ட்டுகள் உள்ளன, மேலும் பல புதிய ரிசார்ட்டுகள் தயாராகி கொண்டுள்ளன. ஒவ்வொரு ரிசார்ட்டும் ஒவ்வொரு தீவில் அமைந்துள்ளது. ஒன்றிலிருந்து ஒன்று வடிவம், இடம், அழகில் வேறுபட்டுள்ளது. ரிசார்ட்டுகள் நட்சத்திர ஓட்டல்களுக்கு உள்ள அனைத்து வசதிகளும் கொண்டுள்ளது.

எல்லா ரிசார்ட்டுகளிலும் ஆயுர்வேத மசாஜ் கிளப்கள் உண்டு.

ஹனிமூன் வரும் தம்பதியர் ரூம் பதிவு செய்யும் போது குறிப்பிட்டால் அதற்குரிய வரவேற்புகள், அலங்காரங்கள் இலவசமாக செய்து தரப்படுகின்றது.

ஒரு சில ரிசார்ட்டுகளில் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.

சுற்றி பார்க்க அருகில் உள்ள தீவுகளுக்கு அழைத்து செல்வதும் மேலும் தலைநகர் மாலேக்கு அழைத்து செல்வதும், தண்ணீரில் டைவிங் செய்ய சொல்லி கொடுப்பதுவும் உண்டு.

எல்லா ரிசார்ட்டிலும் பார்கள் தனியே உண்டு. தலைநகரில் பார்களுக்கு அனுமதி இல்லை. மேலும் மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

முன் கூட்டியே ரூம்களை பதிவு செய்து கொள்வதின் மூலம் மட்டுமே இங்கு வர முடியும். ஏனெனில் அனைத்து நாட்களிலும் இங்குள்ள ரிசார்ட்டுகள் நிரம்பி வழிகின்றன. மேலும் இவ்வாறு பதிவு செய்வதினால் அவர்களே நம்மை ஏர்போர்ட்டில் இருந்து அவர்கள் ரிசார்ட்டுக்கு அழைத்துச்சென்று பின்னர் திரும்ப ஏர்போர்ட்டில் கொண்டு வந்து விடும் பொறுப்பை ஏற்று கொள்கின்றனர்.


தொடரும்..

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

மாலத்தீவு - பாகம் 11

உல்லாசபுரி:







தொடரும்..

சனி, 20 டிசம்பர், 2008

மாலத்தீவு - பாகம் 10

கடல் மீன்கள் பார்க்க தயாரா?.:








கடலுக்கு அடியில் ஹோட்டல் :




தொடரும்..

புதன், 17 டிசம்பர், 2008

மாலத்தீவு - பாகம் 9

சில படங்கள் உங்கள் பார்வைக்கு:






தொடரும்..

மாலத்தீவு - பாகம் 8

காய்கறிகள்: முக்கால்வாசி காய்கறிகள் இந்தியா, சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. உள்ளூரில் விளைந்த சில காய்கறிகள் அதாவது, பச்சை மிளகாய், கோஸ், சேனை கிழங்கு, வாழை வகையரா, மற்றும் தென்னை விற்பனைக்கு கிடைக்கிறது. விலையை பொறுத்த மட்டில் சென்னையை விட மூன்று மடங்கு அதிகம்தான். உதாரனத்துக்கு ஒரு முட்டை விலை இந்தியா ரூபாய் மூன்று. அரிசி, மைதா மாவுக்கு அரசு நிர்ணயித்த விலையில் [ இந்திய மதிப்பில் ஒரு கிலோ பதினைந்து ரூபாய் ] விற்கப்படுகின்றது.

இறைச்சி வகைகள் மீன் தவிர அனைத்தும் மேல் நாடுகளில் இருந்து இறக்குமதி, எனவே அவைகளும் விலை சற்றே அதிகமாகத்தான் உள்ளது. சென்னையில் கிடைப்பது போல் புதிய இறைச்சிகள் இங்கு கிடைக்காது, அனைத்தும் குளிரூட்டப்பட்டுள்ள நிலையில் இருக்கும்.

தொடரும்..

செவ்வாய், 16 டிசம்பர், 2008

மாலத்தீவு - பாகம் 7

மீன்: மாலத்தீவில் அதிகமாக கிடைப்பது
துணா எனப்படும் மீன் வகை தான். இவைகள் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


தொடரும்..

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

மாலத்தீவு - பாகம் 6

பணம் மற்றும் பணமாற்று :

மாலத்தீவின் பணம் ருபியா என்றழைக்கப்படுகிறது. அனைத்து வியாபார தளங்களிலும் கிரெடிட் கார்டுகள் மற்றும் டிராவலர் செக்குகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.


சாலை போக்குவரத்து: உள்ளூரில் கார்களே பயன்படுத்தப்படுகிறது. கட்டணம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

கடல் போக்குவரத்து: தோணி எனப்படும் சிறிய மோட்டார் படகுகள், விரைவு மோட்டார் படகுகள், மற்றும் ஸபாரி செல்ல சொகுசு மோட்டார் படகுகள் பயன்பாட்டில் உள்ளன.


வான் வழி போக்குவரத்து: சிறிய விமானங்கள் மற்றும் தண்ணீரில் பறக்கும் ஏர்- டாக்ஸி எனப்படும் விமானங்கள் உள்ளன.



தொடரும்..

புதன், 10 டிசம்பர், 2008

மாலத்தீவு - பாகம் 5

விமானத்தில் இருந்து மாலத்தீவு, மற்றும் விமானம் ரன்வேயில் இறங்கும் வீடியோ
காட்சி:

செவ்வாய், 9 டிசம்பர், 2008

மாலத்தீவு - பாகம் 4

விசா: விமான நிலையத்தில் நுழையும் போது சுற்றுலா விசா முப்பது நாட்களுக்கு அளிக்கப் படுகிறது. மேலும் முப்பது நாட்கள் நீட்டித்துக்கொள்ளலாம், இது இலவசமாகவ தரப்படுகிறது. முன்னரே அனுமதி பெறத் தேவையில்லை.
வேலை விஷயமாக வருபவர்கள் அதற்கு தனியாக வொர்க் பெர்மிட் எனப்படும் விசா பெற வேண்டும்.

இது முழுக்க முழுக்க ஒரு முஸ்லீம் நாடு, எனவே மற்ற மதங்களை சார்ந்த பொருட்கள், பத்திரிகைகள், படங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.

மொழி: திவேகி இது சமஸ்க்ரிதத்தில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள், இங்குள்ள மக்கள் அனைவரும் ஆங்கிலம் நன்றாக பேசுகிறார்கள், எனவே மொழி பிரச்சினை அனேகமாக இருக்காது.


தொடரும்......

திங்கள், 8 டிசம்பர், 2008

மாலத்தீவு - பாகம் 3


எப்படி வருவது: தற்பொழுது விமானம் மூலமாகவே இங்கு வர இயலும். பெங்களூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவற்றுக்கு நேரடியாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மாலத்தீவுக்கு இயக்கப்படுகின்றன. பயண நேரம் சுமார் ஒரு மணி நேரம் தான். சென்னையில் இருந்து கொழும்பு மார்க்கமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை இயங்கி வருகின்றது. கடல் மார்க்கமாக சரக்கு கப்பல்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றது. விமான நிலையம் அமைந்திருப்பதுவும் ஒரு தீவு தான், பெயர் ஹுலுஹுலெ, இது ஒரு சர்வதேச விமான நிலையமாகும். இங்கிருந்து தேவையான ரிசார்ட்டுக்கு சிறிய விமானம் அல்லது அதி வேக படகுகள் மூலம் செல்லலாம். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இந்நாட்டின் தலை நகரம் மாலே அமைத்துள்ளது.



தொடரும்...

ஞாயிறு, 7 டிசம்பர், 2008

மாலத்தீவு - பாகம் 2

என்னை இந்த எழில் மிகு உல்லாச உலகுக்கு அறிமுகப்படுத்திய நண்பர் திரு பாலச்சந்தர் அவர்களுக்கு எனது முதற்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்.


மாலத்தீவு எங்கே இருக்கின்றது?.

இந்திய பெருங்கடலில், இந்தியா, ஸ்ரீலங்காவில் இருந்து ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் மாலத்தீவு உள்ளது. நாட்டின் மொத்த ஜனத்தொகை மூன்று லட்சம் . மொத்தம் ஆயிரத்து இருநூறு சிறிய தீவுகளை கொண்டது. அதில் இருநூறு தீவுகளில் மட்டும் மக்கள் வசிக்கின்றனர். இதன் தலை நகரம் மாலே என்று அழைக்கப்படுகின்றது. இதுவும் ஒரு தீவுதான்.


தொடரும்....

சனி, 6 டிசம்பர், 2008

மாலத்தீவு -பாகம் 1

அன்புள்ள வலை உலக நண்பர்களே, மாலத்தீவு பற்றிய சில பல தகவல்களை உங்கள் முன் கொண்டு வர செய்ய எனது இந்த சிறிய முயற்சிக்கு உங்கள் மேலான ஆதரவை வரவேற்கின்றேன்.

முதன்முதலாக இன்று காலையில் வாக்கிங் சென்ற பொது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்காக: சூரிய உதயத்துடன் ...
தொடரும்.......