வியாழன், 27 நவம்பர், 2008

சென்ற வார சமையல் பாகம் 1

காலையில் நேரே நண்பர் வீட்டுக்கு வந்துவிட்டேன், அவருடன் சினிமா தியேட்டர் வழியாக கோழி வாங்க சென்றோம். இந்தவூரில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த தியேட்டர், பெயர் ஒலிம்பஸ். பின்னர் வீட்டுக்கு வந்த பின் கோழியை வெட்ட ஆரம்பித்தார் நமது நண்பர். ஆனால் சும்மா சொல்லக்கூடாது என்ன கணக்காய் வெட்டுகிறார் தெரியுமா, நம்ம வூர் பாய் கூட அப்படி வெட்ட மாட்டார். என்ன அழகு, என்ன நேர்த்தி, தொழில் சுத்தம், பார்க்கிறது என்னவோ கணக்கர் வேலை.?? ஹும்ம்
அடுத்து நமது வேலை ஆரம்பித்து விட்டது, அதான் அடுப்பில் ஏற்றுவது. அது தான் நமக்கு கை வந்த கலை ஆயிற்றே . கணக்கில் புலியாக இருந்தால் மட்டும் போதாது, சமையலிலும் புலியாக இருக்க வேண்டும், இல்லாவிடில் கிடைப்பதை கொண்டு திருப்தி அடைய வேண்டும், நம்மால் முடியுமா?. நாக்கு ருசி அப்படி.

எப்படி இருந்த கோழி
இப்படி ஆனது .

அடுத்து தக்காளி ரசம், பிறகு பாகற்காய் பொரியல். இவற்றுடன் நாங்கள் ரெடி?.. நீங்கள் ரெடியா? .

எங்கே தண்ணீர் ??

இன்று காலை எழுந்தவுடன் குளியல் அறை சென்றால் முகம் கழுவ தண்ணீர் வரவில்லை, என்ன ஏது என்று முழிப்பதுற்குள் நண்பரிடம் இருந்து தொலைபேசி என்னவென்று கேட்டால் அங்கும் தண்ணீர் வரவில்லையாம் ?? யாரிடம் சொல்வது எங்கள் குறையை?. சரி, கடையில் சென்று தண்ணீர் வாங்கலாம் என்றால் எவ்வளவு வாங்குவது?. ஹும்ம். எல்லாம் எங்கள் நேரம். ஐந்து லிட்டரில் குளிக்கவா, குடிக்கவா, அனைத்துக்குமா?. ஒருவழியாக குளித்து முடித்து ஆபீஸ் சென்றால் அங்கும் தண்ணீர் பற்றித்தான் பேச்சு?. மாலைக்குள் சரியாகிவிடும் என்றார்கள். இதுவே நம் ஊராக இருந்தால் என்னவாகிஇருக்கும், எல்லோரும் ரோட்டில் இறங்கி கத்திக்கொண்டு இருப்பார்கள். டிவி சேனல் இல் இதே பேச்சாக இருக்கும். அதுவும் ---- டிவி பற்றி கேட்கவா வேண்டும்?. ............. மாலத்தீவில் இருந்து..........

அனைவருக்கும் வணக்கம்.

எனது தமிழ் வலைப்பதிவை பார்வையிட வந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்.

இது எனது முதன்முயற்சி, தொடர வாழ்த்துங்கள்.