ஞாயிறு, 11 ஜனவரி, 2009

சென்ற வார சமையல் - 2


இந்த வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து நடைப்பயிற்சி முடித்தபின் அப்படியே மார்க்கெட் சென்றோம். முன்னர் நாங்கள் சமைத்த மீன் வகையை தேடினோம் தேடினோம், கடைசியில் சற்றே பெரிதாக இருந்ததை வாங்கி வந்தோம். யார் அதை வெட்டுவது?. என்று சற்று குழப்பம் மற்றும் பயமாகவும் இருந்தது, பிறகு டாஸ் போட்டுப்பார்த்ததில் நான் தேர்வடைந்தேன். மிகவும் ஜாக்கிரதையாக நன்கு கூர்மையான கத்தியை எடுத்துக்கொண்டு மெதுவாக வாலை வெட்டினேன், பின் தைரியம் வந்து வஞ்சிரம் மீனை வெட்டுவதுபோல் துண்டு துண்டாக வெட்டி நன்கு நீரில் கழுவிய பிறகு மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மீன் மசாலா தூளை கலந்து வைத்துவிட்டோம். ஒரு மணி நேரம் கழித்து தோசைகல்லில் சற்று என்னை விட்டு மீனை அதில் இட்டு வருத்து விட்டோம். ஆஹா என்ன சுவை. வஞ்சிரம் மீன் தோற்றது போங்கள், அப்படி ஒரு சுவை. பருப்பு கடையல் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு முடித்தோம்.

8 கருத்துகள்:

Unknown சொன்னது…

yes, the taste is very good. next week will tryout the same.

radhu சொன்னது…

Thanks Mr Bala for the Sponsorship.

Babu சொன்னது…

Miga arumai....I want to share something interesting news about this fish.The name of the fish is "Barkuuda".We went for fishing one day in the night,some were catching fish using fishing line couple of friends dived into the sea with sharp rods and torch light to hunt fish. Then all in a sudden one friend was attacked by Barkuuda. It attacked in his mouth with fierce sharp nose, as these type of fishes, hates the light & attacks when exposed to lights.It almost punctured from inner mouth upto the throat. Its a good bate(Thoondil lil idapadum maamisam)to catch fish.

Babu சொன்னது…

Intha vara samayalai yethirpaarthu blog ai open seithen......inum sendra vaara samayalil thaan irukirathu....

radhu சொன்னது…

நன்றி திரு டாபர் அவர்களே, நேரமின்மையால் சற்றே தாமதமானது.

நானானி சொன்னது…

நீங்களே வெட்டி சுத்தம் செய்து சமைத்ததா? அதை மட்டும் நான் செய்ய மாட்டேன். காரணம் பயம்.
சுத்தம் செய்த வஞ்சிரம் மீனை நீங்கள் செய்தது போல் தோசைக்கல்லில் வறுத்து எடுப்பேன். நாம் சேர்க்கும் மசாலாவில் இருக்குது மணம். தையும் என் மகன் ஊரிலிருந்து வந்தால் மட்டுமே செய்வேன். அவனுக்காக.

ஒரு டிப்பு: மீனை சுத்தம் செய்து கடைசியாக வெனீகரில் அலசி சமைத்தால் மீன் வாடை மட்டுப்படும்.

நானானி சொன்னது…

என்னோட சமையல் குறிப்புகளை என் பதிவிலும் சமையல் வலைப்பூதிரட்டியிலும் காணலாம்.
http://thamizhcooking.blogspot.com
http://9-west.blogspot.com

படித்து கருத்து சொல்லவும்

radhu சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி நானானி, இந்த வூரில் மீன் சுத்தம் செய்ய மீன் விலையை விட அதிகம் கேட்கிறார்கள் எனவே தான். மேலும் இந்த மீன் வாடை ஏதும் இல்லை.. உங்கள் வலைபூ ஏற்கனவே எனது புக்மார்க்கில் இணைத்துள்ளேன்.

கருத்துரையிடுக