புதன், 24 டிசம்பர், 2008
மாலத்தீவு - பாகம் 13
வாடகை: இங்கு ரூம் வாடகை இரண்டு நபருக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது நூறு டாலர் முதல் இரண்டாயிரத்து ஐநூறு டாலர் வரை உள்ளது, இதில் உணவுக்கான தொகையும் உள்ளடங்கியுள்ளது. சில ரிசார்ட்டுகளில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து நாட்கள் தங்குவதற்கு தான் ரிசர்வ் செய்யப்படுகின்றது. இரண்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டில் வரியாக எட்டு டாலர் வசூலிக்க படுகின்றது. இரண்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூம் வாடகையில் பாதி மட்டும் கட்ட வேண்டும். இது தவிர போக்குவரத்து செலவுகளுக்கு அதிக பட்சம் ஒருவருக்கு முன்னூறு டாலர் ஆகும். மசாஜ், பார் போன்ற அதிக செலவுகளுக்கு தனியாக தர வேண்டும்.
தொடரும்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 கருத்துகள்:
இது தான் ($) கொஞ்சம் யோசிக்கவைக்கிறது.
ஆமாம் திரு குமார். ஏஜென்ட் கட்டணம் குறைவு தான் ஆனால் ரூம் வாடகை சிந்திக்க வைக்கின்றது.
இது தான் ($) கொஞ்சம் யோசிக்கவைக்கிறது.
எனக்கும் தன்.....
wish you happy Christmas & happy New year 2009
தங்கள்,இதுவரை எழுதிய "மாலத்தீவு தொடர் பூராகவும் படித்து விட்டு இதை எழுதுகிறேன்.
இத் தீவுக் கூட்டத்தை மாலத்தீவு- மாலதீவு- மாலைதீவு...எனக் குறிப்பிடுகிறார்கள். இவற்றில் "மாலைதீவு" என்பதே சரியானது என அறிந்தேன்.மாலை போல் அமைந்திருப்பதால் இக் காரணப்பெயர் வந்ததென கூறினார்கள்.
இணையத்தில் எப்படிப் போட்டாலும் கிடைக்கிறது.
நான் பலதடவை தொலைக்காட்சி விபரணச் சித்திரம் பார்த்துள்ளேன். இயற்கையின் கொடை ஐயமில்லை.
2004 ல் இதன் விமான நிலையத்தில் இலங்கை விமானம் தரித்துப் புறப்பட்டபோது வானிலிருந்து அழகைப் பார்த்தேன். படமாகினேன்.
2025 மட்டில் இத்தீவுக் கூட்டம் கடலுள் மூழ்கிவிடுமென அஞ்சப்படுகிறது.
இந்நாட்டவரை உள்வாங்க ஏனைய நாட்டவர்கள் அனுமதிக்க வேண்டுமென ஐநா அழைப்பும் விட்டுவிட்டதாக அறிந்தேன்.
7ம் பாகத்தில் குறிப்பிட்ட "ருணா" மீனை ; தமிழில் சூரை என்பார்கள். http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=5844இந்தத் தொடரில் பார்க்கவும்.
இத் தீவில் இம் மீனை அவித்துப் பிளிந்து காயவைத்து "மாசி" எனும் கருவாடு உற்பத்தியாகிறது.இதற்கு இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு அரசாங்கத்தை மாற்றும் அளவுக்குச் செல்வாக்கு உண்டு.
ஜெயவர்த்தனா ;தான் ஆட்சிக்கு வந்தால் மாசிக்கருவாடும்; மைசூர் பருப்பும் உடன் இறக்குமதி செய்து
தாராள விநியோகத்துக்கு அனுமதிப்பேன். என தேர்தல் பரப்புரையில் கூறி ஆட்சியைப் பிடித்தவர்.அந்த
அளவுக்கு செல்வாக்கு மிக்கது. "கட்ட சம்பல்" என இதில் சிங்களமக்கள் செய்வார்கள். அருமையாக இருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி மொமுன் அப்துல் கயூம் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவரென்பது
குறிப்பிடத் தக்கது.
இப்போதும் மேற்படிப்புக்காக குறிப்பிட்ட மாணவர்களுக்கு இலங்கை அரசு இடம் கொடுக்கிறது.
உலகிலே இந்த தீவுக்கூட்டம் தான் தொட்டிவளர்ப்புக்கான வண்ண மீன்களை விநியோகிப்பதில் முன்னணி
வகுக்கிறது.
இத்தீவுக்கூட்டத்தைச் சுற்றியுள்ள பவளப்பாறைகளும்; அதன் நீரோட்டத்தின் வெப்பநிலையும்; பல்லின மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்ததாகவும்; பாதுகாப்பானதாக இருப்பதாகவும் உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த வண்ண மீன் விற்பனை கணிசமான அன்நியச் செலவாணியுடன்; தொழிலையும் கொடுப்பதென்பது உண்மையோ அதே அளவு உண்மை சில மீன் இனம் தொடர்ந்து பிடிப்பதால் அற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் மழைநீரைச் சேமித்தே பாவிக்கிறார்கள்.
வீடுகள் அழிந்த பவளப் பாறைகளால் கட்டுகிறார்கள்.
சில தீவுகளுக்கு வேற்றுநாட்டவர் அனுமதியில்லை.
தாங்கள் இட்ட படங்கள் அதிகம் செயற்கை அழகு...இனிமேல் இயற்கை அழகையும் காட்டுங்கள்.
சில காலங்களில் இலங்கை விமானசேவை..அவர்கள் வாடிக்கையாளர்கள் ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்ரேலியா கண்டத்தில் இருந்து இந்தியா;இலங்கை; மாலைதீவு என பயண ஒழுங்கு செய்தால்
3 நாள் மாலைதீவில் தங்க இலவச விடுதி ஒழுங்கு செய்து தருவதாக; விமானத்தில் பணியாளர் கூறினார்.ஆனால் நான் முயலவில்லை.
கட்டணங்கள் மிக அதிகம் என்பது உண்மையே....
தங்கள் பதிவை விட என் பின்னூட்டம் நீண்டு விட்டது..மன்னிக்கவும்.
ஆம், தாங்கள் சொல்வது சரியே மாலைகளைப்போல் அமைந்தது தான் இது. மேலும் நிறைய தகவல்கள் சேகரித்துத் தந்துள்ளீர்கள், மிக்க நன்றி திரு யோகன் பாரிஸ்.
Not all the comments especially like Mr.Yoogan comments, which has some information's.
Mr.Dabour first you change your name
கருத்துரையிடுக