வியாழன், 27 நவம்பர், 2008

எங்கே தண்ணீர் ??

இன்று காலை எழுந்தவுடன் குளியல் அறை சென்றால் முகம் கழுவ தண்ணீர் வரவில்லை, என்ன ஏது என்று முழிப்பதுற்குள் நண்பரிடம் இருந்து தொலைபேசி என்னவென்று கேட்டால் அங்கும் தண்ணீர் வரவில்லையாம் ?? யாரிடம் சொல்வது எங்கள் குறையை?. சரி, கடையில் சென்று தண்ணீர் வாங்கலாம் என்றால் எவ்வளவு வாங்குவது?. ஹும்ம். எல்லாம் எங்கள் நேரம். ஐந்து லிட்டரில் குளிக்கவா, குடிக்கவா, அனைத்துக்குமா?. ஒருவழியாக குளித்து முடித்து ஆபீஸ் சென்றால் அங்கும் தண்ணீர் பற்றித்தான் பேச்சு?. மாலைக்குள் சரியாகிவிடும் என்றார்கள். இதுவே நம் ஊராக இருந்தால் என்னவாகிஇருக்கும், எல்லோரும் ரோட்டில் இறங்கி கத்திக்கொண்டு இருப்பார்கள். டிவி சேனல் இல் இதே பேச்சாக இருக்கும். அதுவும் ---- டிவி பற்றி கேட்கவா வேண்டும்?. ............. மாலத்தீவில் இருந்து..........

2 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

ஆமாம்,மாலத்தீவில் குடி தண்ணீருக்கு என்ன செய்கிறார்கள்.

radhu சொன்னது…

நன்றி வடுவூர் குமார், கடல் நீரைத்தான் குடி நீராக்கித் தருகிறார்கள்.

கருத்துரையிடுக