.jpg)
இந்த வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து நடைப்பயிற்சி முடித்தபின் அப்படியே மார்க்கெட் சென்றோம். முன்னர் நாங்கள் சமைத்த மீன் வகையை தேடினோம் தேடினோம், கடைசியில் சற்றே பெரிதாக இருந்ததை வாங்கி வந்தோம். யார் அதை வெட்டுவது?. என்று சற்று குழப்பம் மற்றும் பயமாகவும் இருந்தது, பிறகு டாஸ் போட்டுப்பார்த்ததில் நான் தேர்வடைந்தேன். மிகவும் ஜாக்கிரதையாக நன்கு கூர்மையான கத்தியை எடுத்துக்கொண்டு மெதுவாக வாலை வெட்டினேன், பின் தைரியம் வந்து வஞ்சிரம் மீனை வெட்டுவதுபோல் துண்டு துண்டாக வெட்டி நன்கு நீரில் கழுவிய பிறகு மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மீன் மசாலா தூளை கலந்து வைத்துவிட்டோம். ஒரு மணி நேரம் கழித்து தோசைகல்லில் சற்று என்னை விட்டு மீனை அதில் இட்டு வருத்து விட்டோம். ஆஹா என்ன சுவை. வஞ்சிரம் மீன் தோற்றது போங்கள்,
அப்படி ஒரு சுவை. பருப்பு கடையல் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு முடித்தோம்.